50 டாலருக்கு வாங்கிய நாற்காலியை 1 இலட்சம் டாலருக்கு விற்ற டிக்டாக் பிரபலம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் மில்லர். டிக்டாக் பிரபலமான இவர் பழம்பொருட்கள் மீது ஆர்வம் கொண்டவர். பழம்பொருட்கள் தொடர்பாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வந்த இவருக்கு பழம்பொருட்கள் பற்றிய அருமைகள் புரிந்தது.

இந்நிலையில் எதேச்சையாக அவர் இணைய தளமான பேஸ்புக் மார்க்கெட்டில் ஒரு பழமையான நாற்காலியை பார்த்துள்ளார். அப்போது அந்த நாற்காலியில் ஏதோ சிறப்பு இருப்பதாக உணர்ந்த அவர் அதனை 50 டாலருக்கு வாங்கினார்.

பின்னர் அந்த நாற்காலியை சீரமைக்க சுமார் 3,000 டாலர் வரை செலவு செய்துள்ளார்.

அதன்பிறகு பழம்பொருட்களை விற்பனை செய்யும் ஏல நிறுவனத்தில் நாற்காலியை கொண்டு சென்றுள்ளார். பழமையான அந்த நாற்காலியை வாங்க கடும் போட்டி ஏற்பட்டது. கடைசியில் அந்த நாற்காலி 1 இலட்சம் டாலருக்கு ஏலம் போனது.

இதனால் மகிழ்ச்சியில் திளைத்த அவர் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த நாற்காலி $30,000 முதல் $50,000 வரை செல்லும் என்று ஜஸ்டின் மில்லர் எதிர்பார்த்ததாகவும், ஆனால் ஏலத்தின் முடிவில் உண்மையான விலை ( $100,000) அவர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் தாண்டியது என்று கூறினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here