பகாங் அரசு ஊழியர்களுக்கு 1,000 ரிங்கிட் பெருநாள் சிறப்பு உதவி: மந்திரி பெசார் அறிவிப்பு

குவாந்தான்:

இந்த ஆண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு, பகாங் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 8,000 அரசு ஊழியர்கள், தலா 1,000 ரிங்கிட் சிறப்பு நிதி உதவியைப் பெறுவார்கள் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் ஹரி ராயா கொண்டாட்டங்களுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு உதவித்தொகை, பெருநாள் கொண்டாட்டங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தகுதியுள்ள பணியாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த ஊக்கத்தொகை அரசு ஊழியர்களைத் தொடர்ந்து சிறப்பான சேவைகளை வழங்கத் தூண்டும் என்றும், அதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வு மேம்படும் என்றும் மந்திரி பெசார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here