மாதம்பட்டி ரங்கராஜுக்கு டி.என்.ஏ. பரிசோதனை

சென்னை,பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பரிசோதனை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மேற்கொள்ளப்பட உள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா ஆகிய இரு தரப்பினரும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை பரிசீலித்த கோர்ட்டு, பரிசோதனை நடத்த அனுமதி அளித்து, அதன் முடிவுகளை கோர்ட்டு நியமித்த மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கூறி ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கோர்ட்டிலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தைதான் என அவர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here