ஒற்றுமை அரசாங்கத்தைவிட்டு விலக அம்னோ இளைஞரணி கோரிக்கை

கோலாலம்பூர்:

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ கட்சி விலக வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞரணி அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளது.

கோலாலம்பூரில் நடைபெற்ற அம்னோ இளைஞரணியின் சிறப்பு மாநாட்டில் (Special Convention) அம்னோ இளைஞரணித் தலைவர் டத்தோ டாக்டர் அக்மால் சாலே (Dr. Akmal Saleh). கூறினார்.

இந்த அறிவிப்புக்கு முக்கிய காரனமாக மலாய்-முஸ்லிம் சமூகத்தின் கண்ணியம் மற்றும் கொள்கைகளைத் தற்காப்பதில் அரசாங்கம் போதிய அக்கறை காட்டவில்லை என்றும், பல விஷயங்களில் சமரசம் செய்து கொள்வதாகவும் அக்மால் சாலே குற்றம் சாட்டினார்.

அக்மால் சாலே தெரிவித்த கருத்துக்கள்:

1. கண்ணியமான எதிர்க்கட்சி: “அதிகாரத்திற்காக நமது கண்ணியத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அரசாங்கத்திலிருந்து விலகி, ஒரு கண்ணியமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவதே சிறந்தது,” என்று அவர் கூறினார்.

2. பாஸ் (PAS) கட்சியுடன் கூட்டணி: மலாய் மக்களின் ஒற்றுமைக்காக அம்னோவும் பாஸ் கட்சியும் மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

3. அரசாங்கத்தின் நிலைத்தன்மை: அம்னோவின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகினாலும், அன்வார் அரசாங்கத்திற்குத் தேவையான பெரும்பான்மை நீடிக்கும் என்பதால் நாட்டின் நிலைத்தன்மை பாதிக்கப்படாது என்று அவர் வாதிட்டார்.

4. கீழ்மட்டத் தொண்டர்களின் குரல்: இது தனது தனிப்பட்ட கருத்து அல்ல என்றும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் எண்ணத்தையே தான் பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் குறித்து அம்னோவின் உச்சமன்றக் குழு (Supreme Council) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, பின்னர் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறவுள்ள அம்னோ பொதுச் சபைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும், இந்த மாற்றங்கள் “கொல்லைப்புற வழியாக” (Backdoor entry) ஆட்சியைப் பிடிக்க எடுக்கும் முயற்சி அல்ல என்றும், முறையான அரசியல் நகர்வாகவே இருக்கும் என்றும் இளையர் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here