ஈரானில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் ஈரான் மீது அமெரிக்கா -இஸ்ரேல் படைகள் தொடர்ந்து ஏவுகணை -குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்தநிலையில், அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களில் ஈரானில் பொதுமக்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மோதல் தொடங்கியதிலிருந்து ஈரானில் பலி எண்ணிக்கை 2,114 முதல் 2,662 பேர் வரை இருக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

48 உயர்மட்ட அரசு மற்றும் ராணுவத் தலைவர்கள் உள்பட 1,000 முதல் 1,500 வரை ஈரான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரானின் துணை வெளியுறவு மந்திரி சயீத் கதிப்சாதே கூறும்போது, நாங்கள் அண்டை அரபு நாடுகளை குறிவைக்கவில்லை. அங்குள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துக்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்துகிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here