பட்டறை வெடிப்பு விபத்தில் சிக்கிய மெக்கானிக் 18 நாட்களுக்குப் பிறகு உயிரிழப்பு!

தானா மேரா | மார்ச் 08, 2026 :

தானா மேரா, கம்போங் ஏர் மெர்போ (Kampung Air Merbo) பகுதியில் உள்ள தனது பட்டறையில் நிகழ்ந்த வெடிப்பு விபத்தில் படுகாயமடைந்த மெக்கானிக், 18 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி காலை 11 மணியளவில், முகமட் ஷாருல் நிசாம் (Mohd Shahrul Nizam, 31) தனது பட்டறையில் தனியாக வேலை செய்து கொண்டிருந்தபோது பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டது.

ஏர் கண்டிஷனிங் கேஸ் அமைப்பில் (Air-conditioning gas system) ஏற்பட்ட கசிவு காரணமாகவே இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகக் காவல்துறை நம்புகிறது.

விபத்தில் சிக்கிய ஷாருல் நிசாம், தானா மேரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி, மயக்கம் தெளிவடையாமலேயே அவர் உயிரிழந்ததாக அவரது மூத்த சகோதரி சைனாவதி ரஹீம் தெரிவித்தார்.

உயிரிழந்தபோது அவரது மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருந்தனர். அவர் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகக் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தனது வீட்டிற்கு அருகிலேயே இந்தப் பட்டறையை நடத்தி வந்தார்.

அவரது உடல் அவரின் கிராமத்தில் உள்ள மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. “ஏதாவது ஒரு அதிசயம் நடந்து அவர் உயிர் பிழைப்பார் என்று நாங்கள் நம்பினோம், ஆனால் இறைவனின் விருப்பம் வேறாக இருந்தது” என அவரது சகோதரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here