கூட்டரசு நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு காரை விட்டு தப்பியோடிய ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு!

கோலாலம்பூர்:

கோலாலம்பூர், கூட்டரசு நெடுஞ்சாலையில் (Federal Highway) ஆபத்தான முறையில் காரைச் செலுத்தி, இரு வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பின்னர், தனது காரை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடிய பெருடுவா கெம்பாரா (Perodua Kembara) கார் ஓட்டுநரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடந்த ஜூன் 20-ஆம் தேதி ஷா ஆலமிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான காணொளி (வீடியோ) சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், நேற்று இரவு அதனை அடிப்படையாகக் கொண்டு பெட்டாலிங் ஜெயா போலீஸார் விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர்.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த உள்ளூர் ஓட்டுநர், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் காரைச் செலுத்தி, ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார். விபத்து நடந்தவுடன் பயந்துபோன அவர், தனது வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடியதாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ஷம்சுடின் மாமட் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் லேசான காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி, சன்வே (Sunway) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தைக் நேரில் கண்ட சாட்சிகள் யாரேனும் இருந்தால், உடனடியாகப் புலனாய்வு அதிகாரி குமரனைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு போலீஸ் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.a

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here