தெரேசா கோக்கின் கார் உடைப்பின் எதிரொலி ;புக்கிட் கியாரா பூங்காவில் CCTV கேமராக்கள் நிறுவப்படுகிறது!

கோலாலம்பூர் | மார்ச் 09, 2026 :

செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் (Teresa Kok) அவர்களின் கார் உடைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, புக்கிட் கியாரா ஃபெடரல் பூங்காவைச் சுற்றிலும் தற்போது சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி மாலை, தெரெசா கோக் பூங்காவிற்கு நடைப்பயிற்சி சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் அவரது காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த கைப்பை மற்றும் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றனர்.

இந்தப் பகுதியில் அடிக்கடி கார் உடைப்புச் சம்பவங்கள் நடப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், குற்றவாளிகளைக் கண்டறியவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் அங்கு சிசிடிவி கேமராக்களைப் பொருத்துமாறு கோலாலம்பூர் மாநகராட்சிக்கு (DBKL) கோரிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 27-ஆம் தேதி இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த DBKL, ஒரு வாரத்திற்குள் கேமராக்கள் பொருத்தப்படும் என உறுதியளித்தது.

தற்போது பல கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை இயங்கத் தொடங்கிவிட்டதாகத் தெரேசா கோக் இன்று நடைபெற்ற தேசிய மகளிர் தின விழாவில் உறுதிப்படுத்தினார்.

நகரவாசிகளின் மற்றும் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாதுகாப்பான சூழலை உருவாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here