டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அனைத்து வீரர்களும் தனது குடும்பத்தினருடன் மைதானத்தில் வெற்றியை கொண்டாடி மகிழந்தனர்.
சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத உலக கோப்பை இதுவாகும். உலக கோப்பையை வெல்ல அவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
அவர் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். சராசரி 80.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 199.37 ஆகும். இதனால் தொடர் நாயகன் விருது சஞ்சுசாம்சனுக்கு கிடைத்தது.
321 ரன் குவித்தது மூலம் ஒரு உலகக் சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு விராட் கோலி 319 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. சாம்சன் இந்த தொடரில் ரன் குவிப்பில் 3-வது இடத்தை பிடித்தார்.
சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதே தொடரில் 20 சிக்சர் அடித்த பின்ஆலன் (நியூசிலாந்து) 2-வது இடத்தில் உள்ளார்.








