ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களிடம் ரூ.18 கோடி கட்டணம் வசூலிக்க முடிவு

நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது. இதன் விளைவாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் முடங்கின.

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல கப்பல்கள் தீப்பற்றி எரிந்தன. ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஆயிரக்கணக்கான இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல கப்பல்கள் தீப்பற்றி எரிந்தன. ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஆயிரக்கணக்கான இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது

ஹார்முஸ் ஜலசந்தி பகுதி ஈரானை ஒட்டியுள்ளதால், எதிரி நாடுகளின் எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கி வருகிறது. உலகளவில் சுமார் 5-ல் ஒரு பங்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து இந்த ஜலசந்தி வழியாக நடைபெறுவதால், ஈரானின் தாக்குதலால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் திறக்கவில்லை என்றால், ஈரானின் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று டிரம்ப் எச்சரித்தார். இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் ஈரான் புதிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி, ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்களிடம் சுமார் 18 கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஈரானின் நாடாளுமன்ற தேசிய பாதுகாப்புக் குழு உறுப்பினர் அலாயுதீன் புருஜெர்டி கூறுகையில், “இது ஈரானின் பலத்தை வெளிப்படுத்துகிறது. இந்த கட்டணம் நாட்டின் சக்தியை காட்டுவதோடு, போர் காரணமாக அதிகரித்துள்ள அரசுச் செலவுகளை சமாளிக்கவும் உதவும். அதே நேரத்தில், இது ஈரானின் அதிகாரத்தையும் பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார். ஈரானின் இந்த அறிவிப்பு தொடர்பாக அமெரிக்கா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here