பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது … பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது …

ஜெய்ப்பூர்,அசாம் மாநிலம் திருப்ருகாரில் உள்ள சபுவா விமானப்படை நிலையத்தில் பல்நோக்கு ஊழியராக பணியாற்றி வந்தவர் சுமித்குமார் (வயது 36.) இவர் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு இந்திய ரகசிய தளவாட விவரங்களை பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஜெய் சல்மாரில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சுமித்குமார் கைது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுமித்குமார் கடந்த 2023-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு உள்ளார்.

அப்போது போர் விமானங்களின் இருப்பிடம், ஏவுகணை அமைப் புகள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை பாகிஸ்தான் உளவாளிகளுக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படுகிறது. கைதான அவர் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மத்திய விசாரணை மையத்துக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here