சிறப்பு பூஜை.. கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் உயிரிழப்பு

பாட்னா,பீகார் மாநிலத்தில் நாலந்தாவில் உள்ள சீட்லா கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக நாலந்தா மாவட்டத்தில் உள்ள சீட்லா கோவிலில் சிறப்புப் பூஜை நடந்துகொண்டிருந்தபோது, ​​ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 8 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திலிருந்து வெளியான அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களில், ஏராளமான பெண்கள் தரையில் மயக்கமடைந்து கிடப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் காணப்பட்டது. தகவல் கிடைத்ததும், போலீஸ் அதிகாரிகள் உள்ளூர் கிராமவாசிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பாட்னா உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவதால், கோவிலுக்கு அதிக கூட்டம் வந்ததாகவும், யாரும் வரிசையில் நிற்க விரும்பவில்லை, அனைவரும் முதலில் தரிசனம் செய்ய முயன்றனர். சித்திரை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால், கூட்டம் இன்னும் அதிகமாக இருந்தது என்றும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here