தீவில் சிக்கிய சிறுவர்கள்… துரத்தும் அமானுஷ்ய சக்தி: ஓடிடியை அதிர வைக்கும் ஹாரர் படம் – எதில் பார்க்கலாம்?

சென்னை,ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெற்றோர் வரை குடும்பமாக பார்க்கக்கூடிய ஹாரர்-அட்வென்ச்சர் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அந்த வகையில், தற்போது கவனம் ஈர்த்து வரும் படம் ’மான்ஸ்டர் சம்மர்’. இத்திரைப்படம் டீனேஜ் ஹாரர்-அட்வென்ச்சர் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. பள்ளி மாணவர்களை சுற்றி நடக்கும் மர்மமான சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த படம் அமைந்துள்ளது.

கோடை விடுமுறையை கொண்டாட பள்ளி மாணவர்கள் குழு ஒரு தீவிற்கு செல்கின்றனர். அங்கு மர்மமான அமானுஷ்ய சக்தி அவர்களை துரத்த ஆரம்பிக்கிறது. அந்த “மான்ஸ்டர்” அவர்களின் மகிழ்ச்சியை சிதைத்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதையடுத்து, அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள், அந்த சக்தியை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே படத்தின் மீதி கதை. பல எதிர்பாராத திருப்பங்களுடன் படம் முழுவதும் சுவாரசியமாக நகர்கிறது.

இந்த படத்தில் ஹாலிவுட் முன்னணி நடிகர் மெல் கிப்சன் மற்றும் இளம் நடிகர் மேசன் தேம்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

முதலில் அமெரிக்காவில் பாரமவுண்ட் பிளஸ் தளத்தில் வெளியான இந்த படம், தற்போது இந்தியாவில் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த 20-ம் தேதி முதல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here