’ஆயிரத்தில் ஒருவன் 2’-க்கு ’நோ’ சொன்ன ஆண்ட்ரியா… ரசிகர்கள் ஷாக் …

சென்னை,கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்த ஆக்சன்-அட்வென்சர் படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். இதன் 2 பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தனுஷ் நடிப்பில் உருவாகும் என இயக்குநர் அறிவித்திருந்தார். ஆனால், அதன் பிறகு எந்த புதிய அப்டேடும் வெளியாகாமல், படம் தாமதமாகி வருகிறது.

இந்நிலையில், முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா, சமீபத்திய பேட்டியில் 2-ம் பாகம் பற்றி அப்டேட் கொடுத்துள்ளார். அவர் பேசுகையில்,

“ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்த அனுபவத்தால், அதன் பிறகு வந்த எல்லா படத்திலும், கதாபாத்திரத்திலும் எளிதாக நடிக்க முடிந்தது. அதனால், ஆயிரத்தில் ஒருவன் 2-ல் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். படம் வந்தால் நல்லது, ஆனால் நான் அதில் இருக்க மாட்டேன். செல்வராகவன் சாருடன் பணிபுரிவது மிகவும் கடினம்,” என்றார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here