மந்தின் பாரு தீ விபத்து: மாற்றுத்திறனாளிப் பெண் பலி

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான், மந்தின் பாருவில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் உயிரிழந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

உதவிக்காக அவர் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு அண்டை வீட்டார்கள் திரண்ட போதிலும், கதவுகள் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததாலும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததாலும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை என நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருண்குமார் தெரிவித்தார்.

தீயணைப்புத் துறையினரால் உடல் மீட்கப்பட்ட நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here