50 சிறுநீரக நோயாளிகளுக்ககு தலா ஆயிரம் ரிங்கிட்  உதவி நிதி பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வழங்கியது

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள பினாங்கு மாநில இந்துகளுக்கு,இந்து அறப்பணி வாரியம் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கி 50 பேருக்கு தலா 1000 ரிங்கிட் உதவி நிதி வழங்கி வருவதாக அதன் தலைவர் ஆர்.எஸ்.என்.ராயர் தெரிவித்தார். பினாங்கு இந்து அறப்பணி வாரியம்  தேவைப்படுவோருக்கு உதவுவதில் தொடர்ந்து முனைப்பு காட்டும். குறிப்பாக மக்களின் சுகாதாரம், சமூக நலன்,கல்வி ஆகிய விவகாரங்களில் முன்னுரிமைத் தரப்படுகிறது.அந்த வகையில் இந்து அறப்பணி வாரியத்திற்கு தான் தலைமை ஏற்ற பிறகு கடந்த 2023 முதல் 2026 வரைமொத்த1,251 பேருக்கு  மொத்த  11 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் மருத்துவம், கல்வி, பேரிடர் போன்ற பல வகையான உதவி
நிதிகளை  வழங்கியுள்ளது என்று அவர் சொன்னார்.
தொடர்ந்து பேசிய சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனரும் வாரியத்தின் துணைத்தலைவருமான டாக்டர் ஆர்.ஏ.லிங்கேஸ்வரன் தற்போதைய சூழலில் ஒவ்வொரு சிறுநீரக நோயாளியும் ஒவ்வொரு முறையும் 150 ரிங் கிட் முதல் 200 ரிங்கிட் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.அதன்படி மாதத்திற்கு 1,800 ரிங்கிட் முதல் 2,400 ரிங்கிட் வரை செலவிட வேண்டியுள்ளது. சுகாதார அமைச்சு தெரிவித்தபடி சிகிச்சை பொருட்களின் விலை உயர்வு, குறிப்பாக பி40 நோயாளிகளை நேரடியாக பாதிக்கிறது. தற்போதைய பொருளாதார சவாலான சூழலில் இது பெரும் சுமை என்பதை நினைவுறுத்தினார். பினாங்கு சாலை குஞ்ச் புகாரி கோயிலில் நடைபெற்ற சிறுநீரக நோயாளிகளுக்கு வாரியத்தின் உதவி நிதியை வழங்கும் நிகழ்ச்சியில பேசிய  அவர் அதிகரித்து வரும் சிறுநீரக சிகிச்சை செலவுச் சுமையை குறைக்க வாரியத்தின் உதவிநிதி உதவும் என்று எதிர்பார்க்கப் படுவதாக கூறினார்.
ராயர் தலைமையிலான தங்களின் நிர்வாகம் கடந்த மூன்றாண்டு களுக்கும் குறைவான காலத்தில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது அவற்றுள் 11 லட்சம் ரிங்கிட் செலவில் தண்ணீர்மலை அருள்மிகு ஸ்ரீ கணேசர் ஆலய சீரமைப்பு ஏறக்குறைய 7 லட்சம் ரிங்கிட் செலவில் படடர் வெர்த் மகா மாரியம்மன் மண்டபத்தை மேம்பாட்டுப் பணிகள், கட்டப்பட்டகாலத்திலிருந்து புதுப்பிக்கப்படாமல் இருந்த இந்த குஞ்ச புகாரி ஆலய சீரமைப்பிற்கு 4 லட்சம் ரிங்கிண்டுற்கும் அதிகமான உதவி நிதி,தற்போது, ​​செபெராங் பிறை பகுதியில் முதல் மின்சுடலையை 20 லட்சம் ரிங்கிட் செலவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மடானி அரசாங்கத்தின் மானியமாக 15 லட்சம் (1.5 மில்லியன்) ரிங்கிட் வழங்கியுள்ளார்.இவை தவிர்த்து இந்துகளின் வசதிகளையும் தேவைகளையும் உறுதி செய்வதற்காக பல்வேறு பிற திட்டங்களும் முடிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
விழாவில் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்ட இலக்கவியல்( டிஜிட்டல் ) துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பினாங்கு இந்து அறப்பணி வாரியம் போன்ற நிறுவனங்களின் பங்கை மடானி அரசு பாராட்டுகிறது. வழிபாட்டுத் தலங்கள் இனம் பாராமல் நலத்திட்ட மையமாக மாறும்போது, அதுதான் உண்மையான மலேசியா என்பதை வெளிப்படுத்தும். சிறுநீரக மையங்களில் இலவச WiFi,  நோயாளிகள் தவணை முன்பதிவு செய்ய, உதவி கோர மைடயாலிஸிஸ்  செயலி மூலம் தமது  அமைச்சு ஆதரவு தரும் என்று அவர் மேலும் சொன்னார்.
கவின்மலர் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here