புதுடெல்லி, டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் “வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காத காரணத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் ரூ.5 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
இது மத்திய அரசு தனது கடமையை நிறைவேற்றுவதில் தவறிவிட்டது என்பதையே காட்டுகிறது. சமையல் எரிவாயு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இந்த சூழலை கண்காணிக்க ஒரு நீதித்துறை விசாரணை குழுவை அமைக்க வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது.









