கனமழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிமாக மூடப்பட்டது

சென்னை :

சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், 20 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், புறப்பட வேண்டிய மற்றும் தரையிறங்க வேண்டிய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அனைத்தும் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இதனிடையே, மிக அவசியமாக இருந்தால் மட்டுமே விமான பயணத்தை மேற்கொள்ளுமாறும், அவசியம் இல்லாவிட்டால் பயணத்தை ரத்து செய்யவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here