மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 147 ஆக உயர்கிறது

புதுடெல்லி, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சத்தா அக்கட்சியின் மேலும் 7 மாநிலங்களவை உறுப்பினர்களுடன் பாஜகவில் இணைவதாக இன்று தெரிவித்துள்ளார். ராகவ் சத்தாவுடன் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சந்தீப் பதாக், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹ்னி, சுவாதி மலிவால் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோரும் பாஜகவில் இணைவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால் மாநிலங்களவையில், பாஜக கூட்டணியின் பலம் 147 ஆக உயர உள்ளது. இந்தியா கூட்டணிக்கு 78 எம்.பி.க்களும், இரு கூட்டணிக்கு வெளியே 19 எம்.பி.க்களும், ஒரு இடம் தற்போது காலியாகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here