புதுடெல்லி, இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ரகு ராய்(83). கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடி ரகு ராய், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரகு ராய் இன்று உயிரிழந்தார்.
கடந்த 1942-ம் ஆம் ஆண்டு, தற்போதைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபின் ஜங் பகுதியில் பிறந்த ரகு ராய், 1965-ல் ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ நாளிதழில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். அதன் பின்னர் 1982-ல் ‘இந்தியா டுடே’ இதழில் 10 ஆண்டுகள் புகைப்பட ஆசிரியராகப் பணியாற்றினார்.









