கோலாலம்பூர்:
விசிட் மலாக்கா 2024 இன் ஒரு பகுதியாக இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளின் வருகையை பதிவு செய்ததன் மூலம், மலாக்கா சுற்றுலாத்துறைக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.
முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோப்பின் தலைமையில் மாநில அரசு செயல்படுத்திய பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் கவர்ச்சிகரமான நடவடிக்கைகளே இந்த வெற்றிக்குக் காரணம் என்று மாநில சுற்றுலா, பாரம்பரியம், கலை மற்றும் பண்பாட்டுத் துறை நிர்வாகி டத்தோ அப்துல் ரசாக் அப்துல் ரஹ்மான் மெளகா தெரிவித்தார்.
மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மிகச் சரியாக அளவிடுவதற்கும் பதிவு செய்வதற்கும் பல்வேறு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த அளவீடுகள் குறித்த விரிவான பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவுகளை ரவூஃப் அவர்களே விரைவில் வழங்குவார் என்றும் அவர் கூறினார்.
இந்த பிரச்சாரம் மலாக்காவிற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.



















