“சரவணபவ” மந்திரத்தின் சிறப்பு

சிவபெருமானுக்கு ஐந்தெழுந்து பஞ்சாட்சர மந்திரம் சிறப்பு வாய்ந்தது ஆகும். திருமுருகனின் ஷடாட்சர மந்திரம் ‘சரவணபவ’ என்பதாகும். ஷடாக்ஷர மந்திரம் (ஆறு எழுத்து மந்திரம்) ஆகும். இந்த மந்திரத்தை தினமும் காலையில் அல்லது மாலையில் 108 முறை அல்லது 24 முறை சொல்வது மன அமைதி, செல்வம், ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றலைத் தரும் என நம்பப்படுகிறது.தினமும் 24 முறை சரவணபவ மந்திரத்தை சொல்லி பழகினால், பிற்காலத்தில் ஒரு முறை அந்த மந்திரத்தை சொன்னாலும் கூட பலன் கிடைக்க துவங்கி விடும் என சொல்லப்படுகிறது.:

சரவணபவ என்பது முருகப் பெருமானின் நாமங்களில் ஒன்று என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த சொல்லோ ஒரு மிகப் பெரிய மந்திரமாகும். இந்த மந்திரத்தில் உள்ள ஆறு எழுந்துக்களும் ஆறு விதமான பலன்களை நமக்கு அளிக்கக் கூடியதாகும். ‘சரவணபவன்’ என்றால் நானல் சூழ்ந்த பொய்கையில் உதித்தவன் என்று பொருள். சரம் என்றால் நானல், வனம் என்றால் காடு என்று பொருள். நானல் எப்போதும் உறுதியாக இருக்கக் கூடியதாகும். அது போல் வீரம், உறுதி ஆகியவற்றை கொண்டவர் என்பதால் முருகப் பெருமானுக்கு சரவணன் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. ‘சரவணபவ’ மந்திரத்தின் தத்துவம் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

ச – செல்வம்
ர – கல்வி
வ – முக்தி
ண – பகை வெல்லல்
ப – காலம் கடந்த நிலை
வ – ஆரோக்கியம்

முருகப் பெருமானின் யந்திரம் ஷட்கோண வடிவானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here