உலகக் கோப்பை தொடக்க விழாவில்  நடனமாடும் பாகுபலி பட நடிகை

கால்பந்து உலகக் கோப்பை தொடக்க விழாவில் பாகுபலி பட நடிகை நோரா ஃபடேகி நடனமாடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 48 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 104 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஃபிஃபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் இந்தப் போட்டிகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து உலகக் கோப்பைக்கான தொடக்க விழா நிகழ்ச்சி கனடாவில் ஜூன் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல திரைப்பட பிரபலங்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.இந்த நிகழ்வில் மைக்கேல் பபுள், அலனிஷ் மொரிஸ்செட்டே, அலீஷா கேரா, எலீயானா, ஜெஸ்ஸி ரீயிஸ், சஞ்ஜோய், வேகாட்ரீம், வில்லியம் பிரின்ஸ் ஆகியோர் இதில் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி கனடாவில் டொரன்டோ பிஎம்ஓ ஃபீல்டு பகுதியில் நடைபெற இருக்கிறது. இந்திய படங்களில் நடித்த பாடகியும் நடிகையுமான நோரா ஃபடேகியும் பங்கேற்கிறார். நோரா ஃபடேகி டெம்பர், பாகுபலி 1 (மனோகரி பாடல்), கிக் 2 ஆகிய படங்களில் நடனமாடியுள்ளார். தமிழில் தோழா படத்தில் நடனமாடியுள்ளார். தற்போது காஞ்சனா 4 படத்திலும் இருக்கிறார்.  முன்னதாக 2022 கால்பந்து உலகக் கோப்பையின் இறுதி விழாவில் இவர் நடனமாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here