ஓர் ஈவி லோரியின் விலை சாதாரண டீசல் லோரியைவிட அதிகம் அந்தோணி லோக்

முதன்மையான சவால் – செலவு:

ஓர் ஈவி லோரியின் விலை சாதாரண டீசல் லோரியைவிட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகம். இது போக்குவரத்து நிறுவனங்களுக்குப் பெரிய தடையாக உள்ளது. அதனால் அரசாங்கம் வரிச்சலுகைகள் போன்ற ஊக்கத் திட்டங்களைப் பற்றி ஆலோசித்து வருவதாக அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

இரண்டாவது சவால் – சார்ஜிங் வசதிகள்:

கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இயங்கும் லோரிகளுக்கு இது பெரிய பிரச்சினை அல்ல, ஆனால் மாநிலங்களுக்கு இடையிலான பயணங் ணங்களில் சிக்கல்கள் உள்ளது. உதாரணமாக, கெடாவிலிருந்து ஜோகூர் வரை செல்லும் லோரிகளுக்கு 800 முதல் 900 கிலோமீட்டர் பயணம் தேவைப்படும். ஆனால் ஈவி லோரிகளின் சார்ஜ் வரம்பு 300 முதல் 400 வரையிலான கிலோமீட்டர் மட்டுமே.ஆகவே, வழியிலேயே சார்ஜிங் நிலையங்கள் தேவைப்படுகிறது என போக்குவரத்து அமைச்சருமான அவர் சொன்னார். தற்போது மலேசியாவில் தன்னாட்சி வாகனங்களுக்கு உரிய சட்ட அமைப்பு இல்லை. 3ஆம் நிலை மட்டுமல்லாமல், சிலர் 4ஆம் நிலை பற்றியும் பேசுகிறார்கள். இப்போது முக்கியமானது என்னவென்றால் இதற்காக, ஒரு மணல் பெட்டி அல்லது சோதனை மையம் தேவைப்படுகிறது என அவர் சொன்னார்.

பாதுகாப்பான முறையில் இந்த தொழில்நுட்பத்தைச் சோதிக்க வேண்டும். சீனாவிற்கு நான் சென்றபோது ஓட்டுநர் இல்லாத பேருந்திலும் வேனிலும் பயணித்தேன். பெய்ஜிங்கில் தன்னாட்சி வாகனங்களுக்கு தனி ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவை பொதுச்சாலைகளில் மற்ற வாகனங்களுடன் சேர்ந்து இயங்குகின்றன என அவர் குறிப்பிட்டார்.மலேசியாவிலும் இதைப் பற்றி திறந்த மனப்பான்மையுடன் அணுகுகிறோம். ஆனால், அரசாங்கம் முதலில் தன்னாட்சி வாகனங்களை, விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சோதனை செய்ய ஊக்குவிக்கிறது என்று மைன்ஸில் நடைபெற்ற வர்த்தக வாகனக் கண்காட்சியில் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்ட அவர் உரையாற்றினார்.

தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க உதவும் தற்போது தளவாடத் துறையில்(லொஜிஸ்டிக்ஸ்) ஓட்டுநர் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக உள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மேலும், இது எம்சிவி இயின் ஏழாவது பதிப்பு. இது மலேசியாவில் உருவான ஒரு பிராண்ட். மேலும் தென்கிழக்காசியாவில் வர்த்தக வாகனங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய கண்காட்சி என்பதில் எங்களுக்குப் பெருமை உண்டு என்று ஃபோட்டோன் நிறுவனத்தின் தோற்றுநர் ஸ்டீவன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு எங்களுக்கு மிகவும் சிறப்பானது. ஏனெனில் இதுவரை இல்லாத அளவிற்கு கருத்தரங்குகள், பயிற்சி அமர்வுகள் நடைபெறுகின்றன. அடுத்த இரண்டு நாட்களில் சுமார் 30 அமர்வுகள் நடைபெறவுள்ளன.மேலும், இந்த ஆண்டில் அனைத்துலக பிராண்டுகளின் பங்கேற்பும் சாதனை அளவில் உள்ளது. சீனா, துருக்கி, இத்தாலி, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிராண்டுகள் பங்கேற்கின்றன என அவர் குறிப்பிட்டார்.

எஸ்.ஷான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here