பிரிமியர் லீக்கில் கோப்பை வென்றது ஆர்செனல் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அசத்தல்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமியர் லீக்கில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்செனல் கால்பந்து அணி கோப்பை வென்று அசத்தியுள்ளது. இதனால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். மென்செஸ்டர் சிட்டி அணி போர்ன்மவுத் அணியுடன் 1-1 என சமன்செய்ததால், ஆர்செனல் அணிக்கு கோப்பை உறுதிசெய்யப்பட்டது. மீதமிருக்கும் ஒரு போட்டியில் மென்செஸ்டர் சிட்டி வென்றாலும் ஆர்செனல் அணியை புள்ளிப் பட்டியலில் முந்த முடியாது என்பதால் கோப்பை உறுதியாகிவிட்டது.

நடப்பு சீசனில் ஆர்செனல் – மென்செஸ்டர் சிட்டி அணிக்கு போட்டி நிலவி வந்தது. இருப்பினும் ஆர்செனல் அணி விடாப்பிடியாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. பிரிமியர் லீக்கில் பலமுறை இரண்டாமிடம் பிடித்து சோக்கர்ஸ் எனப்படும் ஆர்செனல் அணி தற்போது கோப்பையை வென்று அசத்தியுள்ளது. ஆர்செனல் அணிக்கு இது 14ஆவது பிரிமியர் லீக் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 2003-04இல் ஆர்செனல் அணி தோல்வியே சந்திக்காமல் கோப்பை வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் லீக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ஆர்செனல் அணி பிஎஸ்ஜியுடன் மே 30ஆம் தேதி மோதவிருக்கிறது. இன்னும் சாம்பியன்ஸ் லீக்கில் கோப்பை வெல்லாத ஆர்செனல் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பும் காத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here