தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான  கால்பந்துப்  போட்டி

ஆண்கள் பிரிவில்  டிங்கில் தமிழ்ப்பள்ளி

பெண்கள் பிரிவில் பேராக் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி வாகை

(கவின்மலர்)

ஜார்ஜ்டவுன்,டிச.26

நேற்று பினாங்கு அறிவியல் பல்கலைக்கழக திடலில் நடைபெற்ற மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஆண்கள் பிரிவில் சிலாங்கூர் மாநிலத்தின் டிங்கில் தமிழ்ப்பள்ளியும் பெண்கள் பிரிவில் பேராக் மாநிலத்தின் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியும் முதல் பரிசையும் மீஃபா சுழல்கிண்ணத்தையும் தட்டிச் சென்றனர் என்று தலைவர் கே.வி.அன்பானந்தன் கருப்பையா தெரிவித்தார்.

மலேசிய இந்தியர் கால்பந்து சங்கமான மீஃபா ஏற்பாட்டில் 12 வயதிற்கு உட்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான 2023ஆம் ஆண்டுக்கான கால்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் மொத்தம் 40 குழுக்களும் பெண்கள் பிரிவில் 20 குழுக்களும் கலந்துகொண்டன. மொத்தம் ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகள்  இப்போட்டியில் அணிகளைக் களமிறங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர்த்து இறுதிச்சுற்றுக்குத் தேர்வு பெறத் தவறிய குழுக்களுக்காகத் தனியே ஆண்கள் பிரிவுக்கு டத்தோ எம்.எஸ்.மணியம் கிண்ணப் போட்டியும் பெண்கள் பிரிவுக்கு அன்னை மங்களம் கிண்ணப் போட்டியும் நடத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here