கேன்ஸ் விழாவில் மகளுடன் கவனம் ஈர்த்த நடிகை ஐஸ்வர்யா ராய் …

2026-ம் ஆண்டிற்கான 79-வது கேன்ஸ் பட விழா பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. விழாவில் உலகமெங்கும் உள்ள பிரபல ஸ்டார்கள் பலர் கேன்ஸ் விழாவில் பங்கேற்று சிறப்பு சேர்த்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டின் அழகிய கடற்கரை நகரமான கேன்ஸில் மே 12 முதல் மே 23 வரை மாபெரும் கோலாகலத்துடன் நடைபெறுகிறது.

இந்திய திரை உலக பிரபலங்கள் ஆலியாபட், அதிதிராவ் ஹைதரி, ஊர்வசி ரவுதேலா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்பட பலர் பங்கேற்று சிவப்பு கம்பளத்தில் தேவதைகளாக நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

விழாவில் நீல நிற மாடர்ன் கவுன், ஸ்டைலிஷான சிகை அலங்காரம், தனித்துவமான அணிகலனை அணிந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக பறக்கும் முத்தங்களை பறக்க விட்டபடி நடந்து வந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார் ஐஸ்வர்யா ராய். இதன்பின் சில மணி நேரங்களுக்கு பிறகு பிங்க் நிற ஆடையுடன் தனது மகள் ஆராத்யா பச்சனுடன் கேன்ஸ் விழாவில் பங்கேற்றார். அவர் சிவப்பு நிற உடை அணிந்து தாயுடன் இணைந்து நடந்து வந்தார்.

கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.

ஐஸ்வர்யா ராய்க்கு அண்மையில் ஏற்பட்ட லேசான காயம் அல்லது சில தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்த ஆண்டு கான்ஸ் விழாவைத் தவிர்க்கலாம் என்று பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. கான்ஸ் ரெட் கார்பெட்டில் லோரியல் பிராண்ட் தூதராக இந்தியாவின் முகமாக விளங்கும் ஐஸ்வர்யா ராய் இல்லாத கான்ஸ் விழா முழுமையடையாது என்பதே பலரது கருத்தாக இருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் கான்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய் என்ன ஆடை அணியப் போகிறார், அவரது பேஷன் ஸ்டைல் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு உலகளவில் இருக்கும். சிண்ட்ரெல்லா கவுன், பட்டாம்பூச்சி ஆடை எனப் பல மறக்க முடியாத பேஷன் தருணங்களை கான்ஸ் மேடைக்கு வழங்கிய அவர், இந்த ஆண்டும் தனது அசாத்திய தோற்றத்தால் ரெட் கார்பெட்டை அதிரவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here