மலேசியாவின் முதல் 10 அடி உயர வராகி அம்மன் சிலையுடன் மகா கும்பாபிஷேகம்

ஜோகூர் பாருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாக தவமுனீஸ்வரர் மற்றும் ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா எதிர்வரும் மே 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.15 மணி முதல் 9.55 மணி வரை மிக விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த ஆன்மிக விழாவின் சிறப்பம்சமாக, மலேசியாவின் முதல் 10 அடி உயர ஸ்ரீ வராகி அம்மன் சிலையும் பக்தர்களின் தரிசனத்திற்கு அமைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விசேட கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு, தீப லட்சுமி பூஜை, யந்திர ஸ்தாபனம், எண்ணெய் சாத்துதல், யாகசாலை பூஜை, மண்டலாபிஷேக பூஜை உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கும்பாபிஷேக தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ நாக தவமுனீஸ்வரர் மற்றும் ஸ்ரீ வராகி அம்மனின் அருளாசியை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த புனித ஆன்மிக விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு இறையருள் பெற அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

பக்தர்கள் அனைவரும் நேரத்திற்கு முன்பாக வருகை தந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது. மேலும், பக்தர்கள் பூஜை உபயங்கள், அன்னதானம் மற்றும் பிற ஆன்மிக சேவைகளிலும் பங்கேற்று அருள்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்தை +6010-887 5842 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கோகி கருணாநிதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here