ஜோகூர் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 67.44 விழுக்காடு வாக்காளர்கள் வாக்குப்பதிவு!

ஜோகூர் பாரு:

ஜோகூர் மாநிலத் தேர்தலின் வாக்குப்பதிவு இறுதி நிலையை எட்டியுள்ள வேளையில், இன்று மாலை 5 மணி வரை 67.44 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் ஒட்டுமொத்த 2,682,642 தகுதிவாய்ந்த சாதாரண வாக்காளர்களில், இதுவரை 1,809,185 வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்கூட்டிய வாக்குப்பதிவின் போது (Early Voting) மொத்தம் 19,471 வாக்காளர்கள் பங்கேற்றதன் மூலம் 95 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here