வைகாசி விசாகம் அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து விட்டு, விரதத்தை துவக்க வேண்டும்.
- முருகப் பெருமானின் சிலை அல்லது வேலுக்கு பால், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம். எதுவும் இல்லை என்றால் முருகன் படத்திற்கு முன் நைவேத்தியமாக பால், பஞ்சாமிர்தம் படைத்து வழிபட வேண்டும்.
- முருகன் படத்திற்கு பூக்கள், சந்தனம், குங்குமம் ஆகியவை சாத்தி அலங்கரிக்க வேண்டும்.
- “ஓம் சரவணபவ” மந்திரத்தை மனதார ஜபிக்க வேண்டும்.
- கந்தசஷ்டி கவசம், சுப்பிரமணிய புஜங்கம் பாராயணம் செய்யலாம்.
- முருகப் பெருமானுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து, தீபம் ஏற்றி, கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.
- பிறகு முருகப் பெருமானிடம் என்ன வேண்டுதல் நிறைவேறுவதற்காக வேண்டுதல் வைத்து விரதம் இருந்தீர்களோ, அதை மனதார சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும்.
வைகாசி விசாகம் விரதம் :
வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமாக விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அல்லது சாத்வீக உணவுகள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் பூஜை செய்து, பால், பழம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த நாளில் அன்னதானம், பழங்கள், பால் ஆகியவற்றை தானமாக அளிக்கலாம். நெற்றியில் திருநீறு அணிந்து, முருகப் பெருமானின் திருநாமங்களை உச்சரித்த படி இருக்க வேண்டும்.




















