காலிறுதியில் ஸ்விடோலினா

பிரெஞ்ச் பொது டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு உக்ரெய்ன் வீராங்கனை ஸ்விடோலினா முன்னேறினார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் பொது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்றில் உக்ரெய்னின் எலினா ஸ்விடோலினா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் மோதினர். இதில் ஸ்விடோலினா 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு 4ஆவது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரெய்னின் மார்டா கோஸ்டியுக் மோதினர். இதில் ஸ்வியாடெக் 5-7, 1-6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா, சீனாவின் ஜியு வாங் மோதினர். இதில் சிர்ஸ்டியா 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

 பெண்கள் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ஆஸ்திரியாவின் அனஸ்டாசியா போடாபோவா மோதினர். நடப்புச் சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய கோகோ காப் 6-4, 6-7, 4-6 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அமெரிக்காவின் மடிசன் கீஸ் 6-3, 5-7, 7-5 என கனடாவின் விக்டோரியா எம்போகோவை வீழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here