மகளிர் உலகக் கிண்ணம்: காலிறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து அணி தகுதி

 

மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

நேற்று முன்தினம் (7 ஆகஸ்ட்) இங்கிலாந்துக்கும் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி கண்டது.

இங்கிலாந்து அணி 4:2 என பெனால்ட்டிகளில் வெற்றிவாகை சூடியது.

கென்சிங்டன் (Kensington) அரண்மனை அதன் Twitter பக்கத்தின் மூலம் இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துத் தெரிவித்தது.

“சிங்கப் பெண்களே, வாழ்த்துகள்! கடுமையாகப் போட்டியிட்டுக் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டீர்கள்,” என அந்த Twitter கணக்கில் எழுதப்பட்டிருந்தது.

பிரிட்டனின் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட் மிடல்டனும் (Kate Middleton) இங்கிலாந்து அணிக்கு ஆதரவு அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here