தமிழ்ப் பள்ளி தந்த வாழ்வு தனித்துவத்துடன் முன்னாள் அரச மலேசிய ராணுவ வீரர் மனோகரன் சுப்பிரமணியம்

தமிழ் கல்வியில் கற்று இன்று தனித்துவத்துடன் தலை நிமிர்ந்து நிற்கின்றார் முன்னாள் அரச மலேசிய ராணுவ வீரர் மனோகரன் சுப்பிரமணியம் திகழ்கிறார். சுங்கை பாக்காப்பைச் சேர்ந்த முன்னாள் அரச மலேசிய ராணுவ வீரர் மனோகரன் சுப்பிரமணியத்தின் 21 ஆம் ஆண்டு தனித்துவமிக்க சேவைக்காக மே 21 ஆம் தேதி விமானப்படைத் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டத்தோ நூர் ஹாபிஸ் பின் அப்துல் க்ரீம் தலைமையில்  நற்சேவைக்காக மலேசிய சேவைப் பதக்கம் (PJM) பெற்றார். பினாங்கு வால்டோர் தோட்ட தமிழ்ப் பள்ளியில் ஆரம்பப் பள்ளியில் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை கல்வியை பயின்ற இவர். கடந்த 1980ம் ஆண்டில் தமது முதல் பணியை ஜோகூர் உலுதிராமில் மையத்தில் தொடங்கியவர். சரித்திர மாநிலமான மலாக்கா திரெண்டாக் முகாமில் அரச மலேசிய ராணுவ வீரராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிற்கு திறம்பட சேவையாற்றி ஆற்றி அரச மலேசிய ராணுவ வீரராகவும் அவரது பணி காலத்தில் பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளார். தமிழ் மொழி இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை அரச மலேசிய ராணுவ வீரராக ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. பள்ளிப் பருவத்திலேயே சீருடை அணிந்து தமக்கென அடையாளத்தை ஏற்படுத்தியவர். சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் நன்னடத்தை நற்பண்புகளின் அடிப்படையில் சிறந்த தலைமைத்துவத்தின் அங்கீகாரதுவத்திற்கும் அரச மலேசிய ராணுவ வீரராக உன்னத உழைப்புக்கும் கிடைத்த பரிசு என்றார் அவர்.

தமிழ்ப் பள்ளி தந்த வாழ்வும் தமிழ் கல்வியில் கற்றும் இன்றும் தனித்துவத்துடன் தலை நிமிர்ந்து நிற்கின்ற முன்னாள் அரச மலேசிய ராணுவ வீரர் மனோகரன் சுப்பிரமணியம் அவர்களது பாணியில் கோலாலம்பூர் அரசு பொது மருத்துவமனை டாக்டர் எட்வர்ட் ராஜ், ஜொகூர் தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் எட்மண்ட் ராஜ் சார்பாக செர்டாங் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் எட்வின் ராஜ் ஆகியோர் அரசாங்கப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சிறப்புமிக்க நற்சான்றிதழை பெறவுதவிய அனைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here