பிரெஞ்ச் பொது டென்னிசில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் பொது டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் சபலென்கா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் நம்பர்-1 பெலாரசின் அரினா சபலென்கா 23ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் டயானா ஷ்னைடர் மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய சபலென்கா, இரண்டாவது செட்டை 5-7 என போராடி இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய சபலென்கா, 0-6 எனக் கோட்டைவிட்டார்.இரண்டு மணி நேரம், 12 நிமிடம் நீடித்த போட்டியில் சபலென்கா 6-3, 5-7, 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்

மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயா, போலந்தின் மாஜா சவாலின்ஸ்கா மோதினர். இதில் சவாலின்ஸ்கா 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஸ்பெயினின் ரபேல் ஜோடார் மோதினர். இதில் ஸ்வெரேவ் 7-6, 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, பிரேசிலின் மார்சிலோ டெமோலினர் ஜோடி 3-6, 4-6 என, பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா, பிரிட்டனின் ஹென்றி பேட்டன் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here