மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி அறிவிப்பு

சென்னை, அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூன் 18 அன்று மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 107 உறுப்பினர்களுடன் தவெக தனி பெரும் கட்சியாக உள்ளது. எனவே தமிழ்நாட்டில் இருந்து தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். அதுவும் வேறு எந்தக் கட்சியிலிருந்தாவது வேட்புமனு தாக்கல் செய்தால் மட்டுமே தேர்தல் நடக்கும். அதுவும் இல்லை என்றால், தவெக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்.

மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, அப்பதவி காங்கிரசுக்கு வழங்கப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here