ஃபெடரல் நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்ததால் போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூரிலிருந்து ஷா ஆலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு கார், ஃபெடரல் நெடுஞ்சாலையில் தீப்பிடித்ததால் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பிற்பகல் 1.15 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, பெட்டாலிங் ஜெயா தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

தீ விபத்தில் பியூஜியோட் செடான் ரக கார் ஒன்று முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இந்தத் தீ விபத்து குறித்த காணொளிக் காட்சி ‘த்ரெட்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் வைரலானது. இதனால் பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகப் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here