பலத்த காற்றுடன் கொட்டப்போகும் மழை: மலேசியாவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை-இரவு 9:00 மணி வரை நீடிக்கும் என தகவல்!

கோலாலம்பூர்:

லேசியத் தீபகற்பத்தின் பல மாநிலங்கள் மற்றும் கிழக்கு மலேசியாவின் சபா, சரவாக், லபுவான் ஆகிய பகுதிகளுக்கு இடிமின்னலுடன் கூடிய பலத்த மழையும், சூறாவளிக் காற்றும் வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று மாலை 5:15 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள இந்த வானிலை எச்சரிக்கை, இன்று இரவு 9:00 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாதிக்கப்படும் முக்கியப் பகுதிகளாக, கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம், சிலாங்கூர்: உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட், கெடா: பெந்தாங், கோலா மூடா, சிக், பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு,
பேராக்: லாருட், மாடாங் மற்றும் செலாமா, உலு பேராக், கோலா கங்சார், கிந்தா, கம்பார், பாடாங் பத்தாங் மற்றும் முவாலிம், பகாங்: கேமரன் ஹைலேண்ட்ஸ், லிப்பிஸ், ரவுப், பெந்தோங், பெரா மற்றும் ரொம்பின், நெகிரி செம்பிலான்: ஜெலுபு, கோலா பிலா, ஜெம்போல் மற்றும் தம்பின், ஜோகூர்: சிகாமாட், குளுவாங் மற்றும் மெர்சிங், கிளாந்தான் & திரெங்கானு: ஜெலி, கோலா கிராய், குவா மூசாங், உலு திரெங்கானு, மாராங், டுங்குன் மற்றும் கெமாமான் ஆகிய இடங்கள் அடங்கும்.

மேலும் கிழக்கு மலேசியாவில் (East Malaysia) சரவாக்: மிரி மற்றும் லிம்பாங், சபா: கோலா பென்யு, ரானாவ், தாவாவ், குனாக், லகாட் டத்து மற்றும் கோத்தா மருடு மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேசம் என்பனவும் அடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைப்பொழிவின் தீவிரம் ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் (20mm/hour) அதிகமாக இருக்கும் என்றோ அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடரும் என்றோ எதிர்பார்க்கப்படும் போது மட்டுமே இத்தகைய இடிமின்னல் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. இந்த குறுகிய கால எச்சரிக்கைகள் அதிகபட்சமாக ஆறு மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும் என MetMalaysia தெளிவுபடுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் அவதானமாகவும் விழிப்புடனும் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போதைய உடனுக்குடனான வானிலை மாற்றங்களை அறிய MetMalaysia-வின் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கங்களை நேரடியாகக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here