உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 5-1 என சுவீடனை வீழ்த்தியது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நேற்று முன்தினம் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடருக்கான எஃப் பிரிவு லீக் போட்டியில் சுவீடன், நெதர்லாந்து அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணிக்கு பிரையன் பிராப்பி 2 கோல் (5, 17வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். முதல் பாதி முடிவில் நெதர்லாந்து அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியிலும் அபாரமாக ஆடிய நெதர்லாந்து அணிக்கு காக்போ 2 கோல் (47, 54வது நிமிடம்) அடித்தார். தொடர்ந்து போராடிய சுவீடன் அணிக்கு 59வது நிமிடத்தில் எலங்கா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். பின், 89ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் சம்மர்வில் தன்பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜப்பானுக்கு எதிராக ’டிரா’ செய்த நெதர்லாந்து, முதல் வெற்றியை பதிவு செய்தது










