முதல்-அமைச்சர் விஜய்யுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு

சென்னை, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், இந்தியாவுக்கான அமெரிக்க நாட்டு தூதரும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான சிறப்பு தூதருமான செர்ஜியோ கோர் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், பொதுத்துறை முதன்மை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் மரியானா எல்.நெய்ஷூலர், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரிவின் தலைவர் பிரையன் இ.ஸ்மைஸர், புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் அலுவலகத்தின் தலைமை அலுவலர் லிசா ஒய்.பிரவுன், தூதரின் சிறப்பு உதவியாளர் சார்லஸ் வில்லியம் ஹார்டன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here