சுபாங் ஜெயா: டாமன்சாரா-புச்சோங் நெடுஞ்சாலையில், நேற்று போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே அபாயகரமாக புரோட்டோன் X70 வாகனம் ஒன்று BMW கார் மீது மோதிய காணொளி வைரலானதைத் தொடர்ந்து, அதன் ஓட்டுநரை காவல்துறை தேடி வருகிறது.
இந்த மோதல் மாலை 5 மணியளவில் நிகழ்ந்ததாக சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மமாட் கூறினார். புச்சோங்கிலிருந்து சுபாங் ஜெயா நோக்கிச் சென்றுகொண்டிருந்த BMW காரின் ஓட்டுநர், கடும் போக்குவரத்து நெரிசலில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தார்.
பின்னர், அந்த கார் பின்னால் இருந்து ஒரு புரோட்டான் X70 காரால் மோதப்பட்டது என்று அவர் கூறியதாக ஹரியான் மெட்ரோ இன்று இரவு செய்தி வெளியிட்டுள்ளது.விபத்தில் இரு ஓட்டுநர்களுக்கும் காயம் ஏற்படவில்லை என்று வான் அஸ்லான் தெரிவித்தார். புரோட்டான் எக்ஸ்70 வாகனத்தின் ஓட்டுநர் இன்னும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. அவரைத் தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








