Simpan SSPN வைப்புத்தொகையாளரின் குடும்பத்தினருக்கு PTPTN ஆறுதல்; பிள்ளையின் கல்வி மரபைப் பாதுகாக்கும்

தேசிய உயர்கல்வி நிதி நிறுவனம் (PTPTN), ‘Simpan SSPN Ziarah Kasih’ திட்டத்தின் வாயிலாக Simpan SSPN Plus வைப்புத் தொகையாளரான காலஞ்சென்ற ஐனுர் மாஹ்டியா ஸஹ்ரா பிந்தி அப்துல்லா பவுலினா ஒப்பே பவுலஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது.

Simpan SSPN திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தக்காஃபுல் (Takaful) பாதுகாப்பு நன்மைகளை வழங்குவதோடு, வைப்புத்தொகையாளர்களின் குடும்பத்தினரின் நலன் மேலும் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவதில் PTPTN இன் அக்கறையை வெளிப்படுத்துவதாக இத்திட்டம் அமைந்துள்ளது.

இந்தச் சந்திப்பு மேலும் தக்காஃபுல் பாதுகாப்பு நன்மைகளை வழங்கும் நிகழ்ச்சியில் PTPTN தலைமைச் செயல்பாட்டு அதிகாரி புவான் மஸ்துரா முகமட் காலிட் காலஞ்சென்றவரின் கணவரும் அல் ஹிஜ்ரா மீடியா கார்ப்பரேஷனின் (Al Hijrah Media Corporation) படைப்பாக்கத் துறை நிர்வாகியுமான முகமட் ஸைடி அபு ஹுசேனிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அல் ஹிஜ்ரா மீடியா கார்ப்பரேஷனின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி புவான் நட்ஸாரியா முஹமட், PTPTN அல் ஹிஜ்ரா மீடியா கார்ப்பரேஷனின் நிர்வாகத் தரப்பினரும் கலந்துகொண்டனர்.

அல் ஹிஜ்ரா மீடியா கார்ப்ப ரேஷனின் ஊடக ஒருங்கிணைப்பு, பெருநிறுவன விவகாரக் குழுவின் ஊடக ஒருங்கிணைப்புப் பிரிவு மேலாளராகப் பணியாற்றிய காலஞ்சென்ற ஐனுர் மாஹ்டியா ஸஹ்ரா பிந்தி அப்துல்லா பவுலினா ஒப்பே பவுலஸ், மாரடைப்பு காரணமாக 2024 டிசம்பர் 17 ஆம் நாள் காலமானார்.

அவர், 2023 மார்ச் 10 ஆம் தேதி தனது ஒரு குழந்தைக்காக Simpan SSPN Plus கணக்கைத் தொடங்கிய வைப்புத்தொகையாளர் ஆவார். ’டெலிமா’ (Delima) பேக்கேஜிங் கீழ், மாதந்தோறும் RM50.00 செலுத்தும் அடிப்படை யில் இந்தக் கணக்கை அவர் தொடங்கினார்; இதில் RM40.00 சேமிப்பிற்காகவும் RM10.00 தக்காஃபுல் சந்தாவுக்காகவும் ஒதுக்கப் பட்டது. மாதம் RM10.00 தக்காஃபுல் சந்தா செலுத்தியதன் மூலம், Simpan SSPN Plus வைப்புத்தொகையாளரான அவருக்கு, தக்காஃபுல் பாதுகாப்பு நன்மையாக (சாதாரண மரணம்) RM25,000 இழப்பீடு, ஈமச்சடங்கு உதவித் தொகையாக (Khairat Kematian) RM2,800 கிடைத்தது. எனவே, வைப்புத்தொகையாளர் பெற்ற ஒட்டுமொத்த நன்மைகளின் மதிப்பு RM28,000 ஆகும்.

PTPTNஇன் தலைமைச் செயல் பாட்டு அதிகாரி புவான் மஸ்துரா முகமட் காலிட் கூறுகையில், ’’PTPTN முறையான கல்விச் சேமிப்புத் தளத்தை வழங்குவதோடு மட்டுமன்றி, எதிர்பாராத பேரிடர்கள் நிகழும்போது வைப்புத்தொகையாளர்களின் குடும்பத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், கூடுதல் மதிப்பாக Simpan SSPN Plus மூலம் தக்காஃபுல் பாதுகாப்பையும் வழங்குகிறது.

‘Simpan SSPN Ziarah Kasih’ திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இந்தப் பங்களிப்பும் நன்மைகளும் குடும்பத்தினருக்கு தார்மீக ஆதரவை வழங்குவதோடு, அவர்கள் தொடர்ந்து மன அமைதியுடன் வாழ ஓரளவு உதவும் என நம்புகிறோம் என்றார்.

‘Simpan SSPN Plus’ என்பது குழந்தைகளின் எதிர்காலத்திற்கான கல்விச் சேமிப்புக் கருவி மட்டுமல்ல; வைப்புத்தொகையாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பல்வேறு விரிவான பாதுகாப்பு நன்மைகளையும் வழங்குகிறது. சமுதாயத்திற்கு கூடுதல் மதிப்பு தரும் நிதிப் பாதுகாப்பு வலையமைப்பை வழங்குவதோடு, சேமிப்புப் பழக்கத்தை வளர்க்கும் PTPTN-இன் நோக்கத்திற்கு ஏற்ப இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

PTPTN-இடம் ‘Simpan SSPN Prime மேலும் ‘Simpan SSPN Plus ஆகிய இரண்டு (2) சேமிப்புத் திட்டங்கள் உள்ளன; அவை பல்வேறு சிறப்பம்சங்களையும் நன்மைகளையும் வழங்குகின்றன. ‘Simpan SSPN Prime -இன் சிறப்பம்சமானது, RM1,000 அதற்கு மேல் சேமிப்பு வைத்திருக்கும் வைப்புத்தொகையாளர்களுக்கு மரணம் அல்லது நிரந்தர முழு ஊனம் ஏற்பட்டால், ரிங்கிட்டிற்கு ரிங்கிட் (Ringgit Ke Ringgit) என்ற அடிப்படையில் இலவச தக்காஃபுல் பாதுகாப்பை வழங்குவதாகும். இது தவிர, ஆண்டுக்கு RM8,000 வரையிலான சேமிப்பிற்கான வருமான வரி விலக்கு, தகுதியான ஒரு குடும்பத்திற்கு RM10,000 வரையிலான இணை மானியம் (Geran Sepadan),போட்டித் தன்மை வாய்ந்த ஈவுத்தொகை (dividend), ஷரியா விதிகளுக்கு உட்பட்டது, அரசாங்கத்தால் உத்தரவாதமளிக்கப்பட்ட சேமிப்பு ஆகியவையும் இதன் சிறப்பம்சங்களாகும்.

அதேவேளையில், Simpan SSPN Plus தயாரிப்பு மாதம் RM30 (இந்தான் பேக்கேஜ்) முதல் மாதம் RM500 வரை (பெர்லியான் பேக்கேஜ்) ஆறு (6) பேக்கேஜ்களை வழங்குகிறது. இதில் RM1.2 மில்லியன் வரையிலான தக்காஃபுல் பாதுகாப்பு, வைப்புத் தொகையாளர், கணவன்/மனைவி, அதிகப்பட்சம் ஐந்து (5) குழந்தைகளுக்கு ஈமச் சடங்கு உதவித் தொகை, கடுமை யான நோய்களுக்கான தக்காஃபுல் பாதுகாப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான அலாவன்ஸ், வைப்புத் தொகையாளரின் 69 வயது வரையிலான தக்காஃபுல் பாதுகாப்பு போன்ற கூடுதல் நன்மைகள் உள்ளன; இந்த நன்மைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேக்கேஜ் மேலும் தக்காஃபுல் நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும். மேலும், Simoan SSPN Plus கணக்கைத் தொடங்குவதற்கு மருத்துவப் பரிசோதனை தேவையில்லை (பெர்லியான் பேக்கேஜ் தவிர); மூன்று (3) சுகாதாரக் கேள்வி களுக்குப் பதிலளித்தால் மட்டுமே போதுமானது.

எளிதான, விரைவான, பாதுகாப்பான சேவைக்காக myPTPTN செயலி மூலம் Simpan SSPN கணக்கைத் திறக்கவும், சேமிப்பை அதிகரிக்கவும் முடியும். Simpan SSPN பற்றிய கூடுதல் தகவல்களை www.ptptn.gov.my என்ற அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here