மலாக்கா:
அலோர் கஜாவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மாதக் குழந்தையின் பெற்றோர், விசாரணைகளுக்கு உதவுவதற்காக மே 13 வரை ஏழு நாட்கள் போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
22 வயதுடைய தம்பதியினருக்கு எதிராக, ஆயிர் கெரோ அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹதேரியா ஸ்ரீ இன்று தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த வழக்கு 2001 குழந்தைச் சட்டத்தின் பிரிவு 31(1)(a) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
வேலையில்லாத தம்பதியினர் நேற்று மாலை 6.30 மணியளவில் மலாக்க மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு (PICU) முன் ஒரு போலீஸ் குழுவால் கைது செய்யப்பட்டனர்.
மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர், மருத்துவ நிபுணர் குறித்த குழந்தையை பரிசோதனை செய்ததில், குசந்தையின் தலையில் சமீபத்திய மற்றும் பழைய காயங்கள் இருப்பதைக் கண்டறிந்தார் என்று, மலாக்கா காவல்துறைத் தலைவர் டத்தோ துல்கைரி முக்தார் கூறினார்.
மேலும் இந்தக் காயங்கள் துஷ்பிரயோகத்தின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்றார்.
குழந்தை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் தாய் கூறியதை அடுத்து, முதலில் அலோர் காஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் குழந்தையை மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.





















