மக்களின் நம்பிக்கை… லுக்குட்டில் நிரூபித்த தலைவர்! சூ கென் ஹுவா

க.கலை

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் லுக்குட் சட்டமன்றத் தொகுதியில் பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் போட்டியிட்டு மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்ற சூ கென் ஹவா, பின்னர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகப் பொறுப்பேற்று தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.

 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலிலும் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று லுக்குட் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெறாத போதிலும், தனது சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை.

இனம், மதம், மொழி என்ற பாகுபாடின்றி அனைத்து சமூக மக்களுக்கும் சமமான சேவையை வழங்கி, கல்வி, சமூக நலன், அடிப்படை வசதிகள் மற்றும் மக்களின் அன்றாட தேவைகளுக்காக தொடர்ந்து உழைத்து வரும் மக்கள் பிரதிநிதியாக அவர் திகழ்கிறார்.

இம்முறையும் லுக்குட் சட்டமன்றத் தொகுதியில் பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக மீண்டும் களம் இறங்கும் சூ கென் ஹவா, லுக்குட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர்ந்து முன்னேற உங்கள் விலைமதிப்பற்ற ஆதரவையும் வாக்கையும் அன்புடன் கோருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here