ஹயாஷி கராத்தே குழுவின் 40ஆம் ஆண்டு நிறைவு விழா

(எஸ். வெங்கடேஷ் – பி. மலையாண்டி}

பத்துகேவ்ஸ், ஜன. 4-

நாடறிந்த ஹயாஷி கராத்தே குழுவின் 40ஆம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் பத்துகேவ்சில் உள்ள ஷெங்கா மண்டபத்தில் விமரிசையைாக நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.. மோகன் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி குறித்துப் பேசிய ஹயாஷி கராத்தே குழு நிறுவனர் கராத்தே பொன்னையா, நான் 1966ஆம் ஆண்டு முதல் கராத்தே தற்காப்புக் கலையில் ஈடுபட்டு வருகின்றேன்.

பின்னர் இந்தத் தற்காப்புக் கலைக்காக ஒரு குழுவைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உருவாகியது. இதன் அடிப்படையில் 1983ஆம் ஆண்டில் ஜப்பானுக்குச் ஙெ்ன்று முறைப்படி ஹயாஷி கராத்தே குழுவைப் பதிவு செய்து வந்தேன்.

முதலில் சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் – உறுப்பினர்களோடு தொடங்கப்பட்ட இந்தக் கராத்தே குழு தற்போது 40 ஆண்டுகளைக் கடந்து 41ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ளது. இந்த 40 ஆண்டு காலப் பயணத்தில்  பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஹயாஷி குழுவில் கராத்தே தற்காப்புக் கலையைக் கற்றுள்ளனர்.

அவர்களுள் பெரும்பாலானோர் உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடு வரையில் சென்று பல போட்டிகளில் பதக்கங்களையும் வென்றுள்ளனர். அது மட்டுமன்றி என் மகன்களான டத்தோ அறிவழகன், தென்னவன், தியாகு உள்ளிட்டோரும் இந்தக் கராத்தே தற்காப்புக் கலையைப் பயின்றதோடு மட்டுமல்லாது விளையாட்டாளர்களாகவும் பயிற்றுநர்களாகவும் சாதித்துள்ளனர்.

அதேபோல் மற்ற மாணவர்களும் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளனர்.  இப்படி இந்தக் குழுவின் வெற்றியில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கௌரவிக்கும் நோக்கில் இந்த 40ஆம் ஆண்டு நிறைவு விழாவைப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்தோம்.

இதில் இரண்டாவது நிலை தொடங்கி அடுத்தடுத்த டான் நிலைக்கு உயரும் விளையாட்டாளர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் ஹயாஷி குழுவில் இடம்பெற்றவர்கள் தங்கள் கராத்தே தற்காப்புக் கலையையும் வெளிக்காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here