ஜோகூரில் முதலீட்டை விரிவுபடுத்த ஹாங்காங் வர்த்தக சங்கத்துடன் பேச்சுவார்த்தை: ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என லீ தியான் ஹான் உறுதி!

(கோகி கருணாநிதி)

ஜோகூர் பாரு:

ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் (JS-SEZ) தொடர்பான முதலீட்டு வாய்ப்புகள், தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து ஹாங்காங் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஜோகூர் மாநில முதலீடு, வர்த்தகம், நுகர்வோர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் லீ தியான் ஹான் ஆலோசனை நடத்தினார்.

இச்சந்திப்பில், துணை ஆட்சிக்குழு உறுப்பினர் ஹுசைனும் கலந்து கொண்டார்.

ஜோகூரின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய உந்துசக்தியாக ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு வருவதாக லீ தியான் ஹான் தெரிவித்தார்.

ஜோகூரின் மூலோபாய அமைவிடம், தொடர்ந்து விரிவடைந்து வரும் தொழில்துறைச் சூழல் ஆகியவை உயர்தர தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம், தளவாடத் துறை, மேம்பட்ட உற்பத்தித் துறை, திறன் மேம்பாட்டுத் துறை ஆகியவற்றில் முதலீட்டாளர்களுக்கு பரந்த வாய்ப்புகளை வழங்குகின்றன என்றும் அவர் கூறினார்.

இந்தச் சந்திப்பு ஹாங்காங் வர்த்தக சமூகத்துடனான உறவை மேலும் வலுப்படுத்துவதோடு, ஜோகூருக்கும் ஹாங்காங்கிற்கும் பரஸ்பர நன்மை பயக்கும் புதிய முதலீட்டு வாய்ப்புகள், தொழில்துறை ஒத்துழைப்புகளை உருவாக்கும் என லீ தியான் ஹான் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here