இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 11 பேர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, வெள்ளம் நிலச்சரிவில் 4 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 8 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.









