புதுடெல்லி பிரதமருடனான உரையாடலின்போது, நரேந்திரா என்ற பெயரையே நான் வெறுக்கிறேன் என பாகிஸ்தானிய வீரர் கூறிய விசயங்களை இந்திய வீரர் பகிர்ந்து கொண்டார்.
குத்துச்சண்டை வீரர்
காமன்வெல்த் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டினார். அப்போது அவரிடம், காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியா சார்பில் விளையாடி வெள்ளி பதக்கம் வென்றவரான நரேந்தர் பெர்வால் உரையாடினார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பல தசாப்தங்களாக அரசியல் சார்ந்த பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்த சூழலில் பிரதமரிடம், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விசயம் ஒன்றை நரேந்தர் பெர்வால் நினைவுகூர்ந்து பேசினார். அவர் பேசும்போது, பாகிஸ்தானை பற்றி நாம் பேசி கொண்டிருக்கும்போது எனக்கு ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது.










