5 மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 11 மணி வரை ஐந்து மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு பிராந்தியத்தில், வானிலை எச்சரிக்கை பெர்லிஸ் மற்றும் புலாவ் பினாங் மாநிலங்கள் முழுவதையும் உள்ளடக்கியது. கெடாவில் பண்டார் பாரு, கூலிம், பாலிங், கோல மூடா, சிக், யான், பென்டாங், குபாங் பாசு, கோத்தா ஸ்டார் மற்றும் போகோக் சேனா ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பேராக்கில், கெரியன், செலாமா, லாரூட் மாடாங், மஞ்சங் மற்றும் பாகன் டத்தோவில் கடுமையான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பிராந்தியத்தில், சிலாங்கூரில் உள்ள சபாக் பெர்னாம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய பகுதிகளை இந்த எச்சரிக்கை உள்ளடக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here