ஜோகூர் பாரு, உலு திராம், தாமான் டேசா செமர்லாங் என்ற இடத்தில், தங்கள் சக நாட்டைச் சேர்ந்த நபரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை (ஜூலை 15) இரவு 11.15 மணியளவில் ஒரு கடையில் வாடகை அறையில் ஏற்பட்ட சண்டையின் போது பாதிக்கப்பட்டவரின் கழுத்தின் வலது பக்கம் வெட்டப்பட்டது.
39 மற்றும் 40 வயதுடைய இரு சந்தேக நபர்களும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) நள்ளிரவு 12.10 மணியளவில் சண்டை குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஶ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட போது மூன்று பெட்டி வெட்டிகளும் கைப்பற்றப்பட்டன. 37 வயதான கடை தொழிலாளி, ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் குடிபோதையில் இருந்த சந்தேக நபர்களைத் தூண்டியபோது சண்டை ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கொலைக் குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.










