கோலாலம்பூர்:
சமூக வலைத்தளப் பக்கம் ஒன்றில் பகிரப்பட்ட காணொளியில், நபர் ஒருவர் உணவகத்திற்குள் பொதுவெளியில் சிறுநீர் கழிக்கும் அதிர்ச்சிகரமான செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Threads தளத்தில் @mia.azraaaa என்னும் பயனர் பதிவிட்ட இந்தக் காணொளியில், வெள்ளைச் சட்டை அணிந்த நபர் ஒருவர் உணவகத்தின் ஒரு மூலையில் ஜன்னலோரம் நிற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
உணவருந்திக் கொண்டிருந்தபோது இந்த அருவருப்பான செயலால் தமக்கு உண்ணும் ஆசையே போய்விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், கடையின் ஊழியர்கள் இது குறித்துத் தடுத்தனரா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இக்காணொளிக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.























